தமிழ்நாடு

tamil nadu

உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு - துரைமுருகன் அறிவிப்பு

By

Published : Sep 21, 2021, 11:44 AM IST

Updated : Sep 21, 2021, 1:58 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்
செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்

13:50 September 21

வேலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (செப். 21) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி வேலூர் மாவட்டத்திலுள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 13 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. இது தவிர வேலூர் மாவட்டத்திலுள்ள ஏழு ஒன்றியங்களில் 138 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் உள்ளன.  

இதில் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒன்றும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒன்று என 6 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “எதிர்க்கட்சியாக இருந்தபோது பெருவாரியான வெற்றியைப் பெற்றோம். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

மேலும், “பாலாற்றில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது, மோர்தானா அணை நிரம்பியுள்ளது. ஏரிகளுக்குச் செல்லக்கூடிய நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளன.  

11:37 September 21

துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்

இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படும். வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் மட்டுமே முழுமையான அளவு ஏரிகளுக்குத் தண்ணீரைக் கொண்டுசெல்ல முடியும். எனவே பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும்” என்றார்.

நீட் தேர்வினை ரத்துசெய்யும் தீர்மானம் சட்ட ரீதியாக வெற்றிப் பெறாது என்று எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த துரைமுருகன், “வெற்றிபெற வேண்டும் என்றுதான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, துரைமுருகனுடன் திமுக வேலூர் மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நந்தகுமார் உடனிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Last Updated :Sep 21, 2021, 1:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details