தமிழ்நாடு

tamil nadu

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!

By

Published : Sep 23, 2022, 5:13 PM IST

Updated : Sep 23, 2022, 5:35 PM IST

நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து
ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995-ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் தன் மீதான அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஜெகத்ரட்சகனின் மனுவை ஏற்றுக்கொண்டு , அவர் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ரூ.39.18 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் லோன் பெற்ற 6 பேர் - 3 ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை

Last Updated : Sep 23, 2022, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details