தமிழ்நாடு

tamil nadu

நினைவேந்தல் நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்த வேண்டும்- குடந்தை அரசன்

By

Published : May 14, 2022, 6:11 PM IST

நினைவேந்தல் நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்த வேண்டும்

நினைவேந்தல் நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்த வேண்டும் என விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், "தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும்.

இனப்படுகொலை என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்த வேண்டும்.

நினைவேந்தல் நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்த வேண்டும்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் ஒன்று கூடி நடத்த அனுமதிக்க வேண்டும். நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருக்கிறோம். இறந்தவர்களுக்கு நீர்நிலை அருகில் அஞ்சலி செலுத்துவது தமிழர்களின் பண்பாட்டு. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்காமல் இருப்பது பண்பாட்டிற்கு எதிரான முடிவாக கருத வேண்டி இருக்கிறது.

இதற்கு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.மெரினா கடற்கரையில் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே16ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details