தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் கருணாஸ்! அதுவும் இப்படியா?

By

Published : Mar 17, 2022, 7:13 PM IST

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில், கருணாஸ் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் கருணாஸ்
மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் கருணாஸ்

பாலா இயக்கிய ’நந்தா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர், கருணாஸ். இப்படத்தில் இவர் நடித்த லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இதையடுத்து ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்திய கருணாஸ், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வந்தார்.

இதுதவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். "முக்குலத்தோர் புலிப்படை" என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் கருணாஸ்

இந்நிலையில் இவர் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார் என்கிறார்கள்.

இதுகுறித்து அவர் தமிழர் வீரத்தை பறைசாற்றும் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். நீண்டகாலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடிவாசலே வாசல் திறந்து விட்டுள்ளது என்கிறாராம்.

இதையும் படிங்க:பேட்டரி படத்தில் ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடல் என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details