ETV Bharat / state

பேட்டரி படத்தில் ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடல் என்ன தெரியுமா?

author img

By

Published : Mar 17, 2022, 2:01 PM IST

பேட்டரி படத்தில் கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதிய பாடலை, சித்தார்த் விபின் இசையமைக்க, ஜி.வி.பிரகாஷ், சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

சென்னை: ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார்.

படக்குழு
படக்குழு

ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைகாரனை தேடிக்கொண்டிருக்கும் செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவளது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார்.

கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதிய 'நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே என்னில் ஏதோ ஆனது நீதானே.. காதலே நீதானே.. பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா..' என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையமைக்க, ஜி.வி.பிரகாஷ், சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

மணிபாரதியின் இயக்கத்தில், கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின் நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டது. பேட்டரி படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

இதையும் படிங்க: இந்தப் பாடலை பாடியவர் உங்கள் 'விஜய்' : பீஸ்ட் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.