தமிழ்நாடு

tamil nadu

கருணாநிதி நினைவுநாள்: நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

By

Published : Aug 7, 2021, 9:04 AM IST

Updated : Aug 7, 2021, 9:18 AM IST

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Karunanidhi Memorial
Karunanidhi Memorial

சென்னை:திமுகவின் தலைவராக நீண்ட ஆண்டுகள் இருந்தவரும்,முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது. அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி, அமைச்சர் கே.என். நேரு, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

இதையடுத்து மு.க. ஸ்டாலின் கோபாலபுரம், ஆழ்வார்பேட்டை இல்லங்களில் அஞ்சலி செலத்துகிறார்.

கரோனா தொற்றின் 3ஆவது அலை பரவல் காரணமாக, பெரிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தவிர்த்து கருணாநிதியின் நினைவு நாளுக்கு, அவரவர் வீட்டிலேயே திமுக தொண்டர்கள் மரியாதை செலுத்துமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:கருணாநிதி 3ஆம் ஆண்டு நினைவு நாள்: 2ஆவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டிகள்!

Last Updated : Aug 7, 2021, 9:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details