தமிழ்நாடு

tamil nadu

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்

By

Published : Oct 30, 2021, 9:51 PM IST

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ்யை நியமனம் செய்து தமிழ்நாடு தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இல்லம் தேடி கல்வி சிறப்பு அலுவலர்
இல்லம் தேடி கல்வி சிறப்பு அலுவலர்

சென்னை: இளம்பகவத் உள்பட 7 ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்த ஆனந்த் மோகன், ஐஏஎஸ், கோயம்புத்தூர் மாவட்ட வணிகவரி (மாநில வரிகள்) இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட வணிகவரி (மாநில வரிகள்) இணை ஆணையராக இருந்த எஸ். மெர்சி ரம்யா, ஐஏஎஸ், சென்னை வணிக வரிகள் இணை ஆணையராக (உளவுத்துறை-I) நியமிக்கப்பட்டுள்ளார்.

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலர்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் (WB & ADB திட்டம்) இளம்பகவத் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை துணை ஆட்சியராக இருந்த பாலச்சந்தர், ஐஏஎஸ், இடமாற்றம் செய்யப்பட்டு, மின் ஆளுமையின் இணை இயக்குநராக (கூடுதல் பொறுப்பாக) நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக இவர் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை நிர்வாக அலுவலராகவும் செயல்படுவார். ஓசூர் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, ஐஏஎஸ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உதகமண்டலம் துணை ஆட்சியர் டாக்டர். மோனிகா ராணா, ஐஏஎஸ், உதகமண்டலம் மலைகள் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி துணை ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஐஏஎஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநராக (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:நவம்பர் 1ஆம் தேதியே 'தமிழ்நாடு நாள்' - போர்க்கொடி தூக்கும் ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details