தமிழ்நாடு

tamil nadu

திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு

By

Published : May 6, 2021, 6:02 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஐ.பெரியசாமிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு கூட்டுறவுத்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு
ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு

வத்தலகுண்டுவில் கடந்த 1953ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பிறந்தவர் திண்டுக்கல் ஐ பெரியசாமி. வத்தலகுண்டு திமுக ஒன்றிய தலைவராக இருந்த அவர், 1989ஆம் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

இதைத்தொடர்ந்து 1996 தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

2016ஆம் ஆண்டு ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஐ பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். திமுகவில் மு.க. அழகிரி தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தபோது, அப்போது அமைச்சராகவும், திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்த ஐ.பி. அவருடன் மிகவும் நெருக்கம் பாராட்டினார்.

பின்னர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக மாறிப்போனார். தற்போது திமுகவின் துணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். திண்டுக்கல் ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளர், மண்டல பொறுப்பாளர், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். திமுகவில் தென் மண்டலத்தில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த நபராக திகழ்ந்து வருகிறார்.

ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு

இவரது மகன் ஐ.பி செந்தில்குமார் 2016 ஆம் ஆண்டு பழனி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழகத்திலயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐ.பெரியசாமிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு கூட்டுறவுத்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details