தமிழ்நாடு

tamil nadu

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

By

Published : Mar 29, 2021, 5:52 AM IST

Updated : Mar 29, 2021, 6:22 AM IST

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.

ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

பனிக்காலம் முடிந்து, வரும் வெயில் காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. அரங்க பஞ்சமி என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை இந்தியா மட்டுமில்லாது, நேபாளம், வங்கதேசம், மொரீசியஸ், திரினிதாத் போன்ற இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களிலும் கொண்டாடப்பட்டுவருகிறது.

ஹோலி பண்டிகை

ஜோலார்பேட்டையில் ஸ்டாலின் பரப்புரை

திமுக கூட்டணியின் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர் தேவராஜூ, ஆம்பூர் தொகுதி வேட்பாளர் விஸ்வநாதன், வாணியம்பாடி வேட்பாளர் முகமது நயீம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின்

வேளச்சேரியில் கமல் ஹாசன் பரப்புரை

சென்னை, வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக சந்தோஷ் பாபு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அத்தொகுதியில் இன்று மாலை பரப்புரை மேற்கொள்கிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்

தொல்.திருமாவளவன் பரப்புரை

தற்போது இரண்டாம் கட்டத் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தஞ்சை, நாகை மாவட்டங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்

சதுரகிரிக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி நிறைவு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசத்தி பெற்றதாகும். பிரதோஷம், பௌரணமி, அம்மாவசை, பிரதோசம் ஆகிய முக்கிய நாள்களில் மட்டுமே இந்த கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பங்குனி மாத பெளர்ணமியை முன்னிட்டு மார்ச் 26 முதல் நான்கு நாள்கள் சதுரகிரி செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில் இன்றுடன் அந்த அனுமதி நிறைவடைகிறது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்

டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் சேவை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரேபிட் மெட்ரோ, ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் ஆகிய 2 பிரிவுகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோ

இலங்கையில் பள்ளிகள் திறப்பு

இலங்கையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. பள்ளிகளில் அனைத்து சுகாதார நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பள்ளிகள் திறப்பு
Last Updated : Mar 29, 2021, 6:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details