தமிழ்நாடு

tamil nadu

3 மாவட்ட ஆட்சியர்களுக்கு 'பசுமை விருது'

By

Published : Jun 4, 2022, 2:49 PM IST

cm stalin
cm stalin ()

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 4) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2021ஆம் ஆண்டுக்கான பசுமை விருதினை, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். அனீஷ் சேகர், விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.

அதேபோல் மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றிய ராணிப்பேட்டை டேனரி எஃப்ளுயன்ட் டிரீட்மென்ட் கம்பெனி லிமிடெட், பெருந்துறை - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் - சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நீலகிரி மாவட்டம் - கிளீன் குன்னூர் மற்றும் போரூர் - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு 2021ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுடன், பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஸ்டாலின் வழங்கினார்.

இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் 33 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details