தமிழ்நாடு

tamil nadu

மாநில முதலமைச்சர் ஏற்றிய முதல் தேசிய கொடி- ட்விட்டர் போட்டோவை மாற்றிய முதலமைச்சர்

By

Published : Aug 5, 2022, 10:47 AM IST

Etv Bharatமாநில முதலமைச்சர் ஏற்றிய முதல் தேசிய கொடி- ட்விட்டர் போட்டோவை மாற்றிய முதலமைச்சர்

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மாநில முதலமைச்சரால் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடியின் புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் புரொபைல் போட்டோவாக வைத்துள்ளார்.

சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஜனவரி 26 குடியரசு நாளன்று குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட் 15 சுதந்திர நாளன்று இந்திய பிரதமரும் தேசிய கொடியை ஏற்ற வந்தனர். இருப்பினும் இந்த இரு நாள்களிலும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரே தேசிய கொடி ஏற்றும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இதனை எதிர்த்து 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாநில முதலமைச்சர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் உரிமையை வழங்க கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற மத்திய அரசு சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சரும், குடியரசுத் தின விழாவில் ஆளுநரும் தேசிய கொடியை ஏற்றலாம் என ஆணை பிறப்பித்தது.

மாநில முதலமைச்சர் ஏற்றிய முதல் தேசிய கொடி- ட்விட்டர் போட்டோவை மாற்றிய முதலமைச்சர்

ட்விட்டர் புரொபைலில் கருணாநிதி:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் புரொபைல் படத்தை மாற்றியுள்ளார். மேலும் அவரது ட்விட்டர் பதிவில், ‘ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாநில முதலமைச்சர்களும் இந்திய சுதந்திர தினத்தில் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதன் முதலில் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய புகைப்படத்தையே முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படமாக வைத்துள்ளார்.

இதையும் படிங்க:ட்விட்டர் புரொபைல் - தேசிய கொடியை மாற்றினார் பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details