தமிழ்நாடு

tamil nadu

இரண்டாம் பசுமைப் புரட்சி ஆன் தி வே - முதலமைச்சர் பெருமிதம்

By

Published : Aug 7, 2019, 4:38 PM IST

முதலமைச்சர் ()

சென்னை: இரண்டாம் பசுமைப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்த தீவிரமாகத் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30ஆம் ஆண்டு விழாவையொட்டி மூன்று நாட்கள் கருத்தரங்கம் ஆகஸ்ட் 7இல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சாதனை மலரை வெளியிட்டனர்.

விழாவில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பேசுகையில், "வேளாண்மை ஆதிகாலம் முதல் தொடரும் தமிழர்களின் தொழில். மனித வாழ்வோடு இணைந்து நூற்றுக்கணக்கான தொழில்கள் இருந்தபோதும் முதலாவதாக இருப்பது வேளாண் தொழில்தான்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "வேளாண்மை துறை நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு குறியீடு. 2011-12 முதல் 2015-16 வரை வேளாண்மைத் துறைக்கு சுமார் 23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாடு அரசு குடிமராமத்து பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது" என்று பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இரண்டாம் பசுமைப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரமாகசெயல்பட்டுவருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஆறாவது முறையாகத் உணவு உற்பத்தியில் தமிழ்நாடுமுதலிடம் வகிக்கிறது" என்றார்.

கருத்தரங்கத்தில் பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சர்

மேலும், "தண்ணீர் பிரச்னை தமிழ்நாட்டில் பிரதான பிரச்னையாக உள்ளது. இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்து குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

Intro:Body:சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30 ஆம் ஆண்டுவிழாவையொட்டி வளங்குன்றா வளர்ச்சிக்கான குறிக்கோள் மற்றும் பருவநிலை மீட்சிக்கான மூன்று நாள் கருத்தரங்கம் (ஆகஸ்ட் 7, 8, 9) நடைபெறவுள்ளது.இதில் முதலமைச்சர், துணை முதல்வர், எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சாதனை மலரை வெளியிட்டனர்.

விழாவில் துணை முதல்வர் பேசுகையில், வேளாண் தொழில் ஆதிகாலம் முதல் தொடரும் தமிழர்களின் தொழில்..மனித வாழ்வோடு இணைந்து 100க் கணக்கான தொழில்கள் இருந்தபோதும் முதலாவதாக இருப்பது வேளாண் தொழில் தான்.

விவசாயிகளிம் உள்ளங்களும்,இல்லங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. காவேரி பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்றியவர் ஜெயலலிதா. வேளாண்மை துறை மட்டும் அல்ல நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு குறியீடு. 2011-12 முதல் 2015-16 வரை வேளாண்மை துறைக்கு 23555 கோடி நிதி ஒதுக்கீடு செய்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழக அரசு வேளாண்மை துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. குறிப்பாக குடிமாரமத்து பணியை தமிழக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. விவசாயத்திற்கு தீங்கு விளைவிப்பதை தவிர்க்க எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவனம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துள்ளது. இது மத்திய அரசிற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. சுரப்புண்ணை மரங்களையும் , மரக்காடுகளையும் பராமரிக்க வேண்டும் என்ற புரிதல் மக்களிடம் இல்லாமல் இருந்தது என்றார்.

முதல்வர் பேசுகையில், இரண்டாம் பசுமை புரட்சி தமிழகத்தில் ஏற்படுத்திட தீவிரமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் 6வது முறையாக தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தண்ணீர் பிரச்சனை தமிழகத்தில் பிரதான பிரச்சனையாக உள்ளது. இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்து விட்டது. குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூற்வாரப்பட்டு வருகிறது. விரைவாக இந்த நிறுவனத்தின் லீஸ் கெடு நீடித்து கொடுக்கப்படும்.

விழாவில் இந்து பத்திரிகை குழும தலைவர் ராம், வேளாண் விஞாணிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details