தமிழ்நாடு

tamil nadu

குண்டர் சட்டம் காரணமாக கல்யாணராமன் ஜாமீன் மனு தள்ளுபடி

By

Published : Oct 27, 2021, 2:21 PM IST

ட்விட்டரில் தொடர்ச்சியாக சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் தொடர்ந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்யாணராமன்
கல்யாணராமன்

சென்னை: தமிழ்நாடு பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் டவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் கடந்த 16ஆம் தேதி மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் கல்யாணராமனை கைது செய்து சிறையிலடைத்தனர். இதையடுத்து, அவருக்கு ஜார்ஜ் டவுன் பெருநகரக் குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்யாணராமன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்த போது கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அரசுப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details