ETV Bharat / state

இரண்டு அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

author img

By

Published : Oct 27, 2021, 1:13 PM IST

Updated : Oct 27, 2021, 2:49 PM IST

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக விழுப்புரம் சென்ற முதலமைச்சர், வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்திலுள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

அரசு பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
அரசு பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு: கரோனா பரவல் குறைந்து வருவதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் ரூ.200 கோடியில் "இல்லம் தேடிக் கல்வி" திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் மூலம் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டின் அருகே சென்று மாலை நேரத்தில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பாடம் நடத்துவார்கள்.

அரசு பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
அரசு பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர்

இந்த திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (அக்.27) விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள முதலியார் குப்பத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.

அரசு பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
அரசு பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

இதற்காக விழுப்புரம் சென்ற அவர், வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்திலுள்ள பெ. கிருஷ்ணா அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து, மாணவர்களிடையே கலந்துரையாடி அவர்களின் கற்றல் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் மாணவர்களுக்கு வழங்க மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்த இடத்தையும் பார்வையிட்டார்.

அரசு பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
அரசு பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

அங்கிருந்து புறப்பட்டு செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவர்கள் வரிசையில் நின்று கைதட்டி முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் மாணவர்களிடையே சிறிது நேரம் கலந்துரையாடி புறப்பட்டு சென்றார்.

அரசு பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

இந்த ஆய்வின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் புதிய ஆலோசகர் ஆகிறாரா அசோக்வர்தன் ஷெட்டி?

Last Updated :Oct 27, 2021, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.