தமிழ்நாடு

tamil nadu

சாலை மேம்பாட்டு பணிக்காக ரூ.7 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு

By

Published : Nov 22, 2021, 10:51 PM IST

சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி

2021-2022ஆம் ஆண்டிற்கான பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகளின் மேம்பாட்டு பணிக்காக 7 கோடியே 60 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி (Chennai Corporation) மூலம் 5270.36 கி.மீட்டர் நீளமுடைய 34,640 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் 3932.13 கிமீ நீளமுடைய 23.221 எண்ணிக்கையிலான தார் சாலைகளும் 1270.83 கிமீ நீளமுடைய 11039 எண்ணிக்கையிலான சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பல்வேறு திட்டங்களில் மேம்படுத்தல்

சென்னை மாநகராட்சி சாலைகள் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (TURIP) சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் (CMCDM) மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சாலைகள் சேதம்

குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிக்காகவும் சாலைகள் அவ்வப்போது பல இடங்களில் பள்ளம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உட்புற சாலைகளில் வேகத்தடை அமைப்பது, மங்கிபோன தெர்மோபிளாஸ்டிக் கோடுகள் புதுப்பித்தல், வழிகாட்டு பலகைகள் (Sign Boards) அமைப்பது போன்ற போக்குவரத்து அபிவிருத்தி பணிகள் தேவைக்கேற்ப அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.

அதுமட்டுமன்றி மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பெரும் பள்ளங்களும் ஏற்படுகின்றன.

நிதி ஒதுக்கீடு

இதனை பராமரிக்க அல்லது புதுப்பிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒப்பந்ததாரர்கள் நியமித்து ஒரு வருட காலத்திற்கு அவ்வப்போது தேவைக்கேற்ப 2021 - 22 பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் படி 2021-2022ஆம் ஆண்டிற்கான மொத்தம் 7 கோடியே 60 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் உள்புற சாலைகளை ஒட்டும் பணி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள 6 கோடியே 51 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் மேலும் 9 சாலைகள் மைய தடுப்பு மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு பணிக்காக ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக அடையாறு மண்டலத்திற்கு 78 லட்சமும் கோடம்பாக்கம் மண்டலத்திற்கு 68 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன்: நான் அதிகம் பேசமாட்டேன், செயல் தான் என்னுடைய பணி - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details