தமிழ்நாடு

tamil nadu

எல்ஐசி பங்கு கிடைக்குமா? முட்டி மோதும் முதலீட்டாளர்கள்!

By

Published : May 4, 2022, 1:02 PM IST

எல்ஐசி பங்கு விற்பனை இன்று (மே4) முதல் தொடங்கியது. ஒருவேளை அதிக முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தால், பங்குகள் வழங்குவதை செபி முடிவு எடுக்கும்.

LIC
LIC

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று (மே4) தொடங்குகிறது. முன்னதாக, எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கீடு வெளியீட்டில் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கான பங்குகள் முழுமையாக வாங்கப்பட்டுவிட்டன.

இந்த நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 9ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தப் பங்குக்கு ரூ.902-949 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

எல்ஐசி பங்குகளை வாங்கிவிட்டால் அதற்குரிய செய்தி உங்கள் செல்போன் அல்லது மின்னஞ்சலுக்கு தெரிவிக்கப்படும். எனினும், இதற்கான கால அளவு கூறவில்லை. ஒருவேளை அதிக முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தால், பங்குகள் வழங்குவதை செபி முடிவு எடுக்கும்.

எல்ஐசி பங்கு விற்பனையில் 50 சதவீதம் நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் 10 சதவீதம் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்படும். இதில், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும், அதன் ஊழியர்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ரூ.40 தள்ளுபடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எல்ஐசி பங்குகள் விற்பனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details