தமிழ்நாடு

tamil nadu

Gold Rate Today: தங்கம், வெள்ளி விலை திடீர் சரிவு!

By

Published : Jan 6, 2023, 10:35 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து ரூ.41,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடந்த சில வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம், வெள்ளி வாங்க நினைத்த நடுத்தர மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஏறு முகத்தை சந்தித்து வந்த தங்கம் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது திடீரென குறைந்துள்ளது மக்களுக்கு சற்று மகிழ்ச்சி அளித்துள்ளது. 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 38 ரூபாய் விலை குறைந்து ரூ.5,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ.41,520-க்கு விற்பனையாகிறது. நேற்று மாலை சந்தை நிலவரப்படி ரூ.41,824-க்கு விற்பனை செய்யப்பட்ட சவரன் தங்கம் 304 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி கிராம் 74 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது. இதனால் பார் வெள்ளி கிலோ ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை குறைந்தது தொடர்பாக சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை மேலாளர் ஒருவரிடம் கேட்டபோது, "கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வருகை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 2023 நிதித் திட்டமிடல் - பொருளாதார வல்லுநர்களின் டிப்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details