தமிழ்நாடு

tamil nadu

58 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்!

By

Published : Sep 3, 2021, 3:20 PM IST

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் 58 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

Sensex
Sensex

மும்பை : வார வர்த்தகத்தின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை (செப்.3) சென்செக்ஸ் 58 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.

சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான நிலவரம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இந்நிலையில் காலை 10.10 மணிக்கெல்லாம் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 197.71 புள்ளிகள் உயர்ந்து 58,115.69 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடர்ந்தது.

தேசிய பங்குச் சந்தை நிஃப்டியை பொறுத்தவரை 58.60 (0.34) புள்ளிகள் உயர்ந்து 17,292.75 புள்ளிகளாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் ஓஎன்ஜிசி, சுசூகி இந்தியா, டைடன் நிறுவன பங்குகள் லாபத்தில் வர்த்தமாகின.

இந்துஸ்தான் யூனிலிவர், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் அல்ட்ரா டெக் நிறுவன பங்குகள் பெரும் இழப்பை சந்தித்தன.

இதையும் படிங்க : 6ஆவது நாளாக ஏற்றம் கண்ட சந்தை; புதிய உச்சத்தில் சென்செக்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details