தமிழ்நாடு

tamil nadu

பட்ஜெட் 2021: வங்கிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மூலதனம்: வாராக்கடன் வங்கி அமைப்பு?

By

Published : Jan 24, 2021, 1:55 AM IST

2021 பட்ஜெட்டில் வங்கிகளின் வாராக்கடனை சமாளிக்க ரூ.40 ஆயிரம் கோடி மூலதனம் அளிக்கப்பட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்கின்றனர்.

Budget  Capital infusion  bad loans  Nirmala Sitharaman  Reserve Bank  Krishnanand Tripathi  Bankers  economic slowdown  Madan Sabnavis  Chief Economist of Care Ratings  GDP growth  பட்ஜெட் 2021  வங்கிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மூலதனம்  மூலதனம்  வாராக்கடன்  வாராக்கடன் வங்கி  நிர்மலா சீதாராமன்  கோவிட்  மதன் சப்னாவிஸ்
Budget Capital infusion bad loans Nirmala Sitharaman Reserve Bank Krishnanand Tripathi Bankers economic slowdown Madan Sabnavis Chief Economist of Care Ratings GDP growth பட்ஜெட் 2021 வங்கிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மூலதனம் மூலதனம் வாராக்கடன் வாராக்கடன் வங்கி நிர்மலா சீதாராமன் கோவிட் மதன் சப்னாவிஸ்

டெல்லி: கோவிட் -19 உலகளாவிய பெருந்தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் விளைவால் வங்கிகளில் என்பிஏ எனப்படும் செயல்படாத சொத்துக்கள் அல்லது மோசமான கடன்கள் உயர வாய்ப்புள்ளது. இதனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 முதல் ரூ .40,000 வரை வங்கி மறு மூலதன திட்டத்தை அறிவிப்பார் என்று வங்கியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், அரசால் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் முதல் மதிப்பீட்டின்படி, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் கிட்டத்தட்ட 8 சதவீதம் வரை சுருங்கக்கூடும்.

இந்நிலையில் கேர் ரேட்டிங்ஸ் (Care Ratings) தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறுகையில், “பட்ஜெட்டில், வங்கி மறு மூலதனமயமாக்கல் திட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதாவது, ரூ.35,000 முதல் ரூ.40,000 கோடி வரை திட்டங்களை எதிர்பார்க்கிறோம்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “வங்கி மறு மூலதனமயமாக்கல் திட்டத்தை அரசாங்கம் எவ்வாறு செயல்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அரசாங்கம் நேரடி பட்ஜெட் ஆதரவை அறிவிக்கலாம் அல்லது மூலதனத்தை திரட்ட வங்கிகளுக்கு பத்திரங்களை வழங்கலாம்.

தற்போதைய மூலதனமயமாக்கல் முறை சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில், அதிகரித்து வரும் வாராக்கடன்களின் நெருக்கடியை சமாளிக்க பட்ஜெட்டில் வாராக்கடன் வங்கி அமைப்பதை நிதியமைச்சர் அறிவிக்கக்கூடும்.

வாராக்கடன் வங்கி என்பது பிற வங்கிகளின் செயல்படாத சொத்துக்களை ஒருங்கிணைக்கும் ஒரு வங்கி ஆகும். செயல்படாத சொத்துக்களை முன்மொழியப்பட்ட வாராக்கடன் வங்கிக்கு மாற்றுவதன் மூலம் கடன் வங்கிகளின் இருப்புநிலைகளை சுத்தம் செய்ய இது உதவும்” என்றார்.

வாராக்கடன் இடர்பாடுகள்

மேலும், “கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றுநோயின் மோசமான பொருளாதார தாக்கத்தின் காரணமாக, செயல்படாத சொத்துக்கள் (NPA) அல்லது இந்திய வங்கிகளின் வாராக்கடன்கள் மற்றும் வாரா ஐயக்கடன்கள் எதிர்காலத்தில் உயரும்.

பொதுவாக பொருளாதாரம் மந்தமடையும் போது, நாட்டில் செயல்படாத சொத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது உண்மைதான்.

இருப்பினும் தற்போது பொருளாதார சுணக்கம் இருந்த போதிலும், செயல்படாத சொத்துகள் அதிகரிக்கவில்லை. இருப்பினும் இந்த அளவுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் இரண்டும் இடையே ஒரு நேரடி தொடர்பு உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் வாராக்கடன்கள் அல்லது செயல்படாத சொத்துக்கள் கிட்டத்தட்ட 15 விழுக்காட்டை தொடக்கூடும், ஏனெனில் கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுகள் வணிகங்களை, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.

இது பற்றி ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முன்னாள் நிர்வாக இயக்குனர் விஜி கண்ணன், “வாராக்கடன்கள் கடன்களின் பிரச்னை சில காலங்கள் நீடிக்கும். செயல்படாத சொத்துகள் பிரச்னைகள் வெளியேறப்போவதில்லை” என்றார்.

இதையும் படிங்க: 'தற்போதைய சூழலில் வாராக்கடன் தவிர்க்க முடியாது'- சுப்பா ராவ்

ABOUT THE AUTHOR

...view details