தமிழ்நாடு

tamil nadu

ஒரே சீன நிறுவனம் பல பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையை ஆட்கொண்டு வருவது உங்களுக்கு தெரியுமா?

By

Published : Jul 27, 2020, 7:50 PM IST

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் பிபிகே எலெக்ட்ராணிக்ஸ் நிறுவனம் ஒன்-ப்ளஸ் (OnePlus), ஒப்போ (Oppo), விவோ (vivo), ரியல்மீ, ஐக்யூ (iQOO) ஆகிய பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையில் களமாடி வருகிறது. இது இல்லை என்றால் மற்றொன்று என்று வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தின் தகவல் சாதனங்களையே சுற்றி வரவைக்கும் வியாபார யுக்தியை நாட்டில் நிறுவி வெற்றியும் கண்டுள்ளதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

bbk electronics, பிபிகே எலெக்ட்ராணிக்ஸ்
bbk electronics

டெல்லி: சீனாவை தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் பிபிகே நிறுவனம் ஒன்-ப்ளஸ் (OnePlus), ஒப்போ (Oppo), விவோ (vivo), ரியல்மீ, ஐக்யூஓ (iQOO) ஆகிய பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையில் களமாடி வருகிறது.

இது இல்லை என்றால் மற்றொன்று என்று வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தின் தகவல் சாதனங்களையே சுற்றி வரவைக்கும் வியாபார யுக்தியை இந்தியாவில் நிறுவி வெற்றியும் கண்டுள்ளது.

கவுண்டர்பாய்ண்ட் பகுப்பாய்வு தரவுகளின்படி, இந்திய கைப்பேசி சந்தையில் 37 விழுக்காட்டை 2019ஆம் ஆண்டு சீனாவின் பிபிகே நிறுவனத்தின் கைப்பேசிகள் பிடித்துள்ளன. சீனாவின் மற்றொரு நிறுவனமான சியோமி 28 விழுக்காடு சந்தை மதிப்பைப் பெற்றுள்ளது.

எல்லா தரத்திலும் உள்ள வாடிக்கையாளர்களை கவருவதற்காக தனது கிளை படைப்புகளை இந்திய சந்தையில் இந்நிறுவனம் உட்புகுத்தி வந்தது. ஆம் சியோமி நிறுவனத்தின் போக்கோஃபோன் போன்று பிபிகே நிறுவனத்தின் கிளை நிறுவனங்களும் தனித்தனியாக செயல்படும்.

காணுங்கள் பிபிகே நிறுவனத்தின் கிளைப் படைப்புகள்

  • ஒன்-ப்ளஸ்: உயர்தர கைப்பேசி விரும்பிகளுக்கு அதிதிறன் அம்சங்களுடன் வெளிவருகிறது

பட்ஜெட் விலையில் வெளியான ஒன்பிளஸின் புதிய ஸ்மார்ட்போன்!

  • ஒப்போ: கேமரா ஃபோன் என்று அழைக்கப்படும் இந்த கைப்பேசியின் இலக்கே புகைப்பட காதலர்கள்தான்

சீன பொருள்களுக்கு எதிராக ஓங்கும் குரல்: நிகழ்வை கைவிட்ட ஒப்போ!

  • விவோ: இடைப்பட்ட பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கைப்பேசி, தற்போது அதிதிறன் கொண்ட படக்கருவிகளுடன் பிரீமியம் செக்மெண்டில் களமிறங்கியுள்ளது

50 ஆயிரம் ரூபாயக்கு வெளியான விவோவின் புதிய ஸ்மார்ட்போன்!

  • ரியல்மீ: சிறு பயனர்கள் முதல் உயர்தர பயனாளர்களுக்கென அனைத்து வகையான கைப்பேசி மற்றும் தகவல் சாதனங்களை வழங்குகிறது

ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் உயர்வு

  • ஐக்யூ: 5ஜி தொழிற்நுட்பத்தில் இந்தியாவில் வெளியான முதல் திறன்பேசி. அதிதிறன் கொண்ட செயல்பாடுகளுக்காக இந்த தகவல் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யுமா ஐக்யூவின் அடுத்த ஸ்மார்ட்போன்!

ABOUT THE AUTHOR

...view details