தமிழ்நாடு

tamil nadu

300 கோடி போலி கணக்குகளை முடக்கிய பேஸ்புக்

By

Published : Sep 23, 2021, 11:42 AM IST

Facebook
Facebook ()

பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 1,300 கோடி டாலர்களை செலவளித்துள்ளதாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அதிக பயனர்களைக் கொண்டது பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம். பயனர்களின் ரகசியங்களை பாதுகாப்பதில் இந்நிறுவனத்தின் மீது பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதனை சரி செய்வதாக கூறினாலும், பலமுறை தாங்கள் செய்த தவறுகள் குறித்தும் அந்நிறுவனம் அவ்வப்போது ஒத்துக்கொண்டுள்ளது. இதுபோன்ற குறைகளை நீக்கி பாகாப்பை உறுதி செய்யவேண்டும் என பயனர்கள் சார்பில் கோரிக்கைகள் அதிகம் எழுந்தன.

இந்நிலையில், நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 300 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்ட்டலிஜன்ஸ் தொழில்நுட்பம் மூலம் இது சாத்தியமாகியுள்ளதாக இந்நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.

பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,300 கோடி டாலர்களை செலவளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனாளர்களின் பாதுகாப்பிற்காக மட்டும் 40 ஆயிரம் பேர் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிவருவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: கோவளம், ஈடன் கடற்கரைகளுக்கு நீலக்கொடிச் சான்று

ABOUT THE AUTHOR

...view details