தமிழ்நாடு

tamil nadu

நாட்டின் வேலைவாய்ப்பு மீண்டும் எழுச்சி : லிங்க்டு-இன் தகவல்

By

Published : Nov 24, 2020, 3:45 PM IST

இந்தியாவில் கரோனா காரணமாக முடங்கியிருந்த வேலைவாய்ப்பு சந்தை மீண்டும் எழுச்சி கண்டுள்ளது லிங்க்டு-இன் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

LinkedIn
LinkedIn

இந்தியாவில் வேலைவாய்ப்புச் சந்தையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக முக்கியத் தகவலை லிங்க்டு-இன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் கரோனா பொதுமுடக்கம் மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்பிவருவதால், வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

கடந்த ஏப்ரல், மே மாத காலகட்டத்தில் நாட்டின் புதிய பணிவாய்ப்புகளைக் குறிக்கும், வேலைக்கு ஆள்களை சேர்க்கும் எண்ணிக்கை -50 விழுக்காடாக வீழ்ச்சி கண்டது. ஜூலை மாதத்தில் அது மெல்ல சீரடைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 12 விழுக்காடாக உயர்ந்த நிலையில், தற்போது செப்டம்பர் மாத இறுதியில் 30 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.

இன்னும் முழுமையான சீரமைப்பு ஏற்படாத நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 விழுக்காடு உயர்வு என்பது நம்பிக்கை அளிக்கும் அம்சம் என லிங்க்டு-இன் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

கரோனாவுக்குப் பின்னர் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவர்கள் தற்போது வேறுதுறைகளில் பணியாற்ற விரும்புவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:ஃபியூச்சர் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் : உயர்வு கண்ட ரிலையன்ஸ் பங்குகள்

ABOUT THE AUTHOR

...view details