தமிழ்நாடு

tamil nadu

ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய்

By

Published : Dec 1, 2020, 4:58 PM IST

டெல்லி : தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகளுடன் தற்போது வரை அமலில் உள்ளது. இதனால் அனைத்து தொழில்துறையும் முடங்கியது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் பாதிப்படைந்தது.

தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட 1.4 விழுக்காடு அதிகமாகும். கடந்த அக்டோபர் மாதம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது.

இந்த மாதம், பொருள்களை இறக்குமதி செய்ததன் மூலம் 4.9 விழுக்காடு வரி வருவாய் அதிகரித்துள்ளது. உள்நாட்டு வர்த்தகப் பரிமாற்றம் 0.5 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் நிதித்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் 97 ஆயிரத்து 597 கோடி ரூபாயும், ஏப்ரல் மாதத்தில் 32 ஆயிரத்து 172 கோடி ரூபாயும், மே மாதத்தில் 62 ஆயிரத்து 151 கோடி ரூபாயும், ஜூன் மாதத்தில் 90 ஆயிரத்து 917 கோடி ரூபாயும், ஜூலை மாதத்தில் 87ஆயிரத்து 422 கோடி ரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் 86 ஆயிரத்து 449 கோடி ரூபாயும், செப்டம்பர் மாதத்தில் 95 ஆயிரத்து 480 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details