நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் தாக்கம் காரணமாக தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை சீர் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.
குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் தற்போது எழுந்துள்ளது. இதையடுத்து, தொழிலாளர்கள் காப்பீட்டு சட்டத்தில் மாற்றத்தை மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, 10 அல்லது 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் கட்டாயம் இ.எஸ்.ஐ.சி. எனப்படும் மாநில பணியாளர்கள் காப்பீடு கழகத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.