தமிழ்நாடு

tamil nadu

ESI திட்டம்: மகப்பேறு உதவித்தொகையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு!

By

Published : Jul 29, 2020, 4:03 AM IST

டெல்லி: தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின் (ESI) கீழ் காப்பீடு பெற்ற பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு உதவித்தொகையை 7,500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மகப்பேறு உதவித்தொகையை அதிகரிக்க அரசு திட்டம்!
மகப்பேறு உதவித்தொகையை அதிகரிக்க அரசு திட்டம்!

மத்திய அரசின் தொழிலாளர்நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC). இதில், மாதத்திற்கு 21 ஆயிரம் ரூபாயோ அல்லது அதற்குக் கீழோ ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உறுப்பினரானால், காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அவசரக் காலங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். அவரது குடும்பத்தினரும் இதன்மூலம் பயன்பெறலாம்.

இக்காப்பீட்டுத் திட்டத்தில் மகப்பேறு மருத்துவச் செலவுகளும் அடங்கும். மகப்பேறு மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களில் காப்பீடு பெற்ற பெண்ணுக்கோ அல்லது காப்பீடு பெற்றவரின் மனைவிக்கோ பிரசவம் நேரும்போது, அவர்களுக்கு ஏற்படும் செலவுத்தொகையை ஈடு செய்வதற்காக மத்திய அரசுத் தரப்பில் 5,000 ரூபாய் வழங்கப்பட்டுவந்தது.

தற்போது அந்தத் தொகை 7,500 ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழிலாளர்நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கான வரைவு அறிக்கையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் இதுதொடர்பாகக் கருத்து தெரிவிக்க 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அனைவரின் கருத்துகளையும் கேட்டு, பரிசீலித்த பின் அமைச்சகம் இதுகுறித்த இறுதிமுடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க...அடுத்த 4 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறை மீளுமா? ஃபாடா துணைத் தலைவர் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details