தமிழ்நாடு

tamil nadu

மோசடி செய்தவருக்கு மீண்டும் பதவி: போராட்டத்தில் சுய உதவிக்குழு பெண்கள்!

By

Published : Oct 5, 2020, 5:35 PM IST

கன்னியாகுமரி: வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கியில் மோசடி செய்ததாக நீக்கம் செய்யப்பட்ட செயலாளருக்கு மீண்டும் பதவி வழங்கியதை கண்டித்து சுய உதவிக்குழு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுய உதவிக்குழு பெண்கள் போராட்டம்
சுய உதவிக்குழு பெண்கள் போராட்டம்

குமரி மாவட்டம் பறக்கை வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கியின் முன்னாள் செயலாளராக இருந்தவர் தங்க குரூஸ். இவர் வங்கியில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து வங்கியின் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்ததோடு, இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் நீக்கம் செய்யப்பட்ட தங்க குரூசுக்கு மீண்டும் பதவி நியமன ஆணை வழங்கியதாக கூறப்படுகிறது. எனவே இதைக் கண்டித்து பறக்கை கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் சுய உதவிக்குழு பெண்கள் கூட்டுறவு வங்கியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, "முன்னாள் செயலாளர் தங்க குரூஸ் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதனால் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் உறுப்பினர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் பணி ஆணை வழங்கியது மிகவும் கண்டிக்கதக்கது. எனவே பணி ஆணையை ரத்து செய்வதுடன் அவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details