தமிழ்நாடு

tamil nadu

தந்தையை உலக்கையால் அடித்துக் கொன்ற மகன்; போலீஸ் விசாரணை

By

Published : Jun 6, 2020, 5:24 PM IST

அரியலூர்: நிலப் பிரச்னை காரணமாக தந்தையை உலக்கையால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்வ குமார்
செல்வ குமார்

அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். கூலித் தொழிலாளியான இவருக்கு, செல்வகுமார் என்ற மகன் உள்ளார்.

செல்லப்பாண்டியன் தனது 30 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து, ஆட்டு வியாபாரியான சாமிதுரைக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.

இதையடுத்து கொடுத்தப் பணத்தை வாங்கி நிலத்தை மீட்குமாறு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, செல்வகுமார் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது செல்லபாண்டியன் இரும்புக் கம்பியால், தனது மகனை தாக்க முயற்சித்தார். இதனால் கோபமடைந்த செல்வகுமார், உலக்கையால், செல்லப்பாண்டியனின் தலையில் தாக்கியுள்ளார்.

அதில் பலத்த காயமடைந்த செல்லப்பாண்டியனை, அருகில் இருந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து தந்தையைக் கொன்ற செல்வகுமாரை கயர்லாபாத் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details