தமிழ்நாடு

tamil nadu

’நாடார் சமுதாய பெண்கள் குறித்து அவதூறு பதிவிட்ட நபரை கைது செய்ய வேண்டும்’

By

Published : Jun 9, 2020, 4:00 AM IST

சென்னை : நாடார் சமுதாய பெண்களை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவிட்ட நபரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யகோரி நாடார் மகாஜன சபையினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

person who has slandered the Nadar community should be arrested
person who has slandered the Nadar community should be arrested

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அந்த சபையின் தலைவர் கார்த்திகேயன், " சமூக வலைதளங்களில் மணிகண்டன் என்பவர் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் நாடார் சமுதாய பெண்களை பற்றி மிகவும் அவதூறாக பேசி கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதேபோன்று பல்வேறு நபர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு சாதி சண்டைகளை மறைமுகமாகத் தூண்டி வருகின்றனர்.

சட்ட ஒழுங்கு சீர்குலையும் முன்னர், நாடார் பெண்களை பற்றி ஆபாசமாக பேசிய மணிகண்டனை தேசிய பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

இது தொடர்பாக காவல் துறை துணை ஆணையர் நாகஜோதியை சந்தித்து மனு அளித்துள்ளோம். அவர் குறிப்பிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details