தமிழ்நாடு

tamil nadu

கோயிலுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு: வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

By

Published : Jul 26, 2020, 10:06 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கோயிலுக்குள் புகுந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோயிலுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு: வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
10 feet Python enters into temple

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கிராம மக்கள், பாம்பை கோயிலில் இருந்து வெளியே அகற்றினர். பின்னர் பாம்பு பிடிக்கும் இலியாஸ் என்ற இளைஞரை வரவழைத்தனர்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த மலைப்பாம்பை பிடித்து வனத் துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர், வனத்துறையினர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details