தமிழ்நாடு

tamil nadu

சாலை விபத்தில் சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு

By

Published : Jul 3, 2020, 4:46 PM IST

பெரம்பலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Law college student accident death
Law college student accident death

பெரம்பலூர் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரின் மகன் சரத்குமார்(27) இவர் ஆந்திராவில் உள்ள சட்ட கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று(ஜூலை 3) காலை பெரம்பலூரில் இருந்து மருவத்தூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பெரம்பலூர்-அரியலூர் சாலையில் க. இறையூர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருவத்தூர் காவல் துறையினர் உயிரிழந்த சட்ட கல்லூரி மாணவர் சரத்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details