தமிழ்நாடு

tamil nadu

கருணாநிதி பிறந்தநாள்: பலூன்களைப் பறக்கவிட்ட திமுகவினர்

By

Published : Jun 4, 2020, 1:24 PM IST

Updated : Jun 4, 2020, 1:37 PM IST

சேலம்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு திமுகவினர் மலர் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

kalaignar97 birthday celebration in salem selvaganapathy
kalaignar97 birthday celebration in salem selvaganapathy

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், திமுகவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளருமான டி.எம். செல்வகணபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மருத்துவர் பிரபு கலந்துகொண்டு கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

முன்னதாக, கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் திமுக சார்பில் வண்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Last Updated :Jun 4, 2020, 1:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details