தமிழ்நாடு

tamil nadu

'காவல் துறைக்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்' - நாகை எஸ்பி

By

Published : Jun 10, 2020, 10:09 PM IST

நாகை: காவல் துறைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறியுள்ளார்.

 மீனவ கிராமத்தில் விழிப்புணர்வு மற்றும்  கலந்தாய்வு கூட்டம்
மீனவ கிராமத்தில் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் விழிப்புணர்வு மற்றும் மீனவ மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சீர்காழி டிஎஸ்பி ஆர்.வந்தனா தலைமை வகித்தார். இதில் நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ”வாழும் பகுதி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் காவல் துறையுடன் நல்ல உறவு வேண்டும்.

காவல் துறைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். சமூகத்திலுள்ள பல பிரச்னைகளுக்கு காவல் துறையினரால் தீர்வு காண முடியும் என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டும். காவல் துறையினரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து சுய மரியாதையுடனும், சுய ஒழுக்கத்துடனும் இருந்தால்தான் தங்கள் கடைமைகளைச் சரியாக செய்யமுடியும்.

நாகையில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்ததே காரணம். காவல் துறையினரிடம் பொதுமக்கள் தைரியமாக தங்களது கருத்துக்களை முன்வைக்க வேண்டும். அப்போது தான் தீர்வு காண முடியும். கரோனா தொற்று கண்டு யாரும் அச்சமடைய வேண்டாம். சீர்காழி உட்கோட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மக்கள் ஒத்துழைப்பு, ஆதரவு இருந்தால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நாகை மாற்றப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details