தமிழ்நாடு

tamil nadu

சாத்தான்குளம் கொலை வழக்கு: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Jul 6, 2020, 3:43 PM IST

சென்னை: சாத்தான்குளம் இரட்டை படுகொலையை கண்டித்தும், தனி அமைப்பை உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் தனி அமைப்பை உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல் துறையினர், இருவரையும் அடித்து கொன்றதாக கூறப்படும் வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையில், இந்த வழக்கை காவல் துறையே விசாரிக்கக் கூடாது என்றும், பிரகாஷ் சிங் வழக்கின் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, குற்றமிழைத்த காவல் துறையினரை, தனி அமைப்பை உருவாக்கி விசாரிக்க வேண்டும்.

ஊர்க்காவல் படை (பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்) தடை செய்ய வேண்டும், தவறான மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டும் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி உயர்நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் தனி அமைப்பை உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில செயலாளர் பாரதி மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் பார்வேந்தன், சுதா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details