தமிழ்நாடு

tamil nadu

கரோனா பரிசோதனை முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர்

By

Published : Jul 24, 2020, 6:51 PM IST

புதுச்சேரி: கரோனா பரிசோதனை முடிவுகள் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரோனா பரிசோதனை முடிவுகள் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தகவல்.
கரோனா பரிசோதனை முடிவுகள் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தகவல்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 492 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது‌.

அதில் 145 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்றதில் 91 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2 பேர் கரோனாவால் உயிரிழந்த நிலையில் 53 பேர் காரைக்கால் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தினந்தோறும் மாவட்டத்தில் 80 முதல் 90 நபர்கள் வரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் பலர் கரோனா பரிசோதனை முடிவுகளை கேட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இதனால் நோய் பரவலை தவிர்ப்பதற்கும், அலைச்சல் , நேர விரயம் இவற்றை கருத்தில் கொண்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் பரிசோதனை முடிவுகளை அவரவர்களின் கைப்பேசிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு குறுஞ்செய்தியாக இனிவரும் காலங்களில் அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவால் தேநீர் விற்கும் வழக்கறிஞர்!

ABOUT THE AUTHOR

...view details