தமிழ்நாடு

tamil nadu

'தமிழ்நாட்டிற்குள் கால் வைத்தாலே கரோனா டெஸ்ட் கட்டாயம்' - மக்கள் நல்வாழ்வுத் துறை!

By

Published : May 31, 2020, 6:18 PM IST

சென்னை: சென்னை பெருநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னைக்கு வந்தால் பரிசோதனை கட்டாயம்
சென்னைக்கு வந்தால் பரிசோதனை கட்டாயம்

கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பரிசோதனைகள், தனிமைப்படுத்தும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்திற்குள் பயணம் செய்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் தேவையில்லை என்றும் மேலும் அவர்களுக்கு பரிசோதனை அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''சென்னை பெருநகர மாநகராட்சி எல்லையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். விமானம், ரயில், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் இ-பாஸ் கட்டாயம் பெறவேண்டும். பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறவேண்டும். பரிசோதனையின்பொழுது வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானால் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள் அரசின் தனிமைப்படுத்தும் முகாம்களில் ஏழு நாள் தங்க வைக்கப்படுவார்கள். பணிகள் நிமித்தமாக செல்பவர்கள் மீண்டும் 48 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்தும் முகாமில் இல்லாமல் திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

நாட்டில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கு ஹாட்ஸ்பாட்டாக உள்ள மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் அனைவரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைவரும் பரிசோதனை செய்யப்படுவார்கள்.

பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டும். பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என வருபவர்கள் 14 நாட்கள் வீட்டிலோ அல்லது கட்டணம் செலுத்தியோ தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தும் முகாம்களில் 14 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள்" என பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details