தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறை!

By

Published : Jun 13, 2020, 1:58 PM IST

சென்னை: ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக 15 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக 15 ஆயிரம் புகார்கள்.!
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக 15 ஆயிரம் புகார்கள்.!

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் மற்றும் ஐ.நா சபை உள்ளிட்டவை அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் இம்மாதம் (ஜூன்) 10ஆம் தேதி வரை பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரத்து 522 புகார்கள் காவல் துறையினருக்கு வந்துள்ளன. அதாவது, பெண்கள் உதவி எண் 1091 மூலமாக, ஏழு ஆயிரத்து 372 புகார்கள் வந்துள்ளதாகவும், பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் மூலம் ஆறு ஆயிரத்து 150 புகார்கள் வந்துள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details