தமிழ்நாடு

tamil nadu

ஹரியானா: கிராம தலைவருக்கு ரூ.11 லட்சம் மாலை அணிவிப்பு

By

Published : Nov 27, 2022, 11:41 AM IST

ஹரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம தலைவருக்கு ரூ.11 லட்சம் மாலை அணிவிக்கப்பட்டது.

கிராம தலைவருக்கு 11 லட்சம் மாலை அணிவிப்பு
கிராம தலைவருக்கு 11 லட்சம் மாலை அணிவிப்பு

ஹரியானா: ஃபரிதாபாத் மாவட்டத்தில் ஃபதேபூர் தாகா கிராம தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆஸ் முகமது வெள்ளிக்கிழமை இரவு (நவ. 25) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இருவக்கு, 500 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாலையை கிராம மக்கள் அணிவித்தனர்.

மாலையின் நீளம் அதிகமாக இருந்ததால், கட்டடத்தின் முதல் தளத்தில் ஆஸ் முகமது நின்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கிராம மக்களின் அன்பினால் வெற்றி பெற்றுள்ளேன் எனவும் மக்களின் ஊழியராக பணிபுரிவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிதியுதவியாக கொடுத்த காசோலைகள் பவுன்ஸ்.. காங்கிரஸ் பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details