தமிழ்நாடு

tamil nadu

U-19 World Cup: அமெரிக்க அணியா..? இந்திய பி டீமா..? குழம்பிப்போன ரசிகர்கள்

By

Published : Dec 18, 2022, 9:23 PM IST

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அமெரிக்க அணி வீராங்கனைகள் பட்டியல் வெளியான நிலையில், இது அமெரிக்க அணியா அல்லது இந்தியாவின் பி டீமா என கமென்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

டி20
டி20

நியூயார்க்:19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற உள்ளது. தொடருக்கான வீராங்கனைகள் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகின்றன.

இதில் அமெரிக்கா வெளியிட்டுள்ள வீராங்கனைகள் பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கனைகள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அந்த சுவாரஸ்யத் தக்க தகவல்.

15 பேர் கொண்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் உள்ள அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய இந்திய வம்சாவளியினர். கீதிகா கொடலி என்பவர் அமெரிக்க 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்க அணியின் வீராங்கனைகளின் பட்டியல் இணையத்தில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் இது அமெரிக்க அணியா அல்லது இந்தியாவின் பி டீமா என கமென்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:FIFA world cup: இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை...

ABOUT THE AUTHOR

...view details