தமிழ்நாடு

tamil nadu

ஈடிவி செய்தி எதிரொலி - உ.பி பள்ளியில் பாலியல் புகாரை கையிலெடுத்த மகளிர் ஆணையம்

By

Published : Dec 7, 2021, 8:42 PM IST

Womens Commission

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் புகார் தொடர்பாக அம்மாநில மகளிர் ஆணையம் மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகேயுள்ள பள்ளி ஒன்றில் பள்ளி நிர்வாகி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த மாதம் புகார் எழுந்தது.

நவம்பர் 18ஆம் தேதி அன்று அப்பள்ளியின் மேலாளர் அடுத்தநாள் செய்முறை தேர்வுக்கு தயராவதற்கு, அப்பள்ளி மாணவிகளை இரவு நேரத்தில் பள்ளியிலேயே தங்கி படிக்க செல்லியுள்ளார். இரவில் அவர் பாணம் ஒன்றில் மதுவை கலந்து கொடுத்து மாணவிகளை பருகச் சொல்லி, பின்னர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை மாணவிகள் பெற்றோரிடம் சொல்ல, பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறை அவர்களின் புகாரை கண்டுகொள்ளாமல் அலைக்கழித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், நமது செய்தியை அடிப்படையாகக் கொண்டு அம்மாநில மகளிர் ஆணையம் புகாரை கையிலெடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட பள்ளி ஆய்வாளர் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பிரமோத் உத்வால் இதுதொடர்பாக உரிய விசாரணை நடைபெற வேண்டும் என காவல்துறையினரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:காந்தி நாட்டை கோட்சே நாடாக மாற்றும் பாஜக - மெஹ்பூபா முப்தி புகார்

ABOUT THE AUTHOR

...view details