தமிழ்நாடு

tamil nadu

ரூ.20,353 கோடி மதிப்பிலான மோசடி சொத்துகள் கண்டுபிடிப்பு - அரசு தகவல்

By

Published : Dec 7, 2021, 10:48 PM IST

Rajya Sabha

வெளிநாடுகளில் ரூ.20,353 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பதிக்கிவைத்திருந்ததை அரசு கண்டறிந்துள்ளதாக மாநிலங்களவையில் அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் சுஷில் குமார் மோடி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதிலளித்துள்ளார்.

அதில், வருமான வரி சட்ட விதிகளை மீறி செயல்பட்ட நபர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் கருப்பு பணம் குறித்தும் முக்கிய விவரங்களை தெரிவித்தார்.

அதன்படி, "பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ், பன்டோரா பேப்பர்ஸ் போன்ற செய்தி கசிவுகளின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 930 நிறுவனங்கள் ரூ.20,353 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகளை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.153.88 கோடி தொகை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 52 வழக்குகள் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக" அவர் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பான உரிய விசாரணையை மேற்கொள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் மூத்த அலுவலர்களை வைத்து குழு அமைத்து விசாரணை நடைபெறுவதாக கூறினார்.

இதையும் படிங்க:காந்தி நாட்டை கோட்சே நாடாக மாற்றும் பாஜக - மெஹ்பூபா முப்தி புகார்

ABOUT THE AUTHOR

...view details