தமிழ்நாடு

tamil nadu

காத்துவாக்குல ரெண்டு காதல் - ஓர் இளைஞனுக்காக சண்டை போட்டுக்கொண்ட இரு பெண்கள்

By

Published : Jun 18, 2023, 1:55 PM IST

ஜார்க்கண்ட் மாநிலம், கோடர்மாவில் இரண்டு பெண்கள் ஒரே இளைஞனை தங்கள் கணவர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய விசித்திரமான சம்பவம் ஏற்பட்டது. இருவரும் அந்த இளைஞனை திருமணம் செய்து கொண்டதாக கூறுகின்றனர்.

koderma
koderma

கோடர்மா: ஜார்க்கண்ட் மாநிலம், ஜும்ரி திலையாவில் உள்ள ஜந்தா சௌக்கில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த மக்கள் கூடியபோது மணமகனுக்காக இரு பெண்கள் சண்டையிட்ட விவகாரம் புரிந்தது. நடுரோட்டில் வைத்து சண்டை ஏற்பட்டதை அடுத்து, அங்கு கூடிய மக்கள் சலசலப்பு குறித்து போலீசாருக்குத் தெரிவித்தனர். அதன் பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட இரு பெண்களையும், கணவன் எனக் கூறி, பெண்கள் சண்டையிட்ட இளைஞனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கணவன்-மனைவி இடையே மற்றொரு பெண்ணின் பிரவேசம்:பின்பு இது குறித்து பர்காதாவை சேர்ந்த பச்சு ராம் என்பவரிடம் விசாரித்த போது, அவர் கூறியதாவது: தனது மகன் சந்தீப் ராமு, குடியா தேவியை காதல் செய்ததாகவும், அதற்கு ஒப்புக்கொண்டு இருவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து வைத்ததாகவும், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், இவரது மனைவி குடியா தனது குடும்பத்தை எதிர்த்து, தனது மகனை திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பிறகு இவர்கள் சந்தோஷமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது இருவரின் வாழ்கையில் வேறொரு பெண் நுழைந்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆன்லைன் பண மோசடி செய்த இரண்டு நைஜீரியா நாட்டு இளைஞர்கள் கைது; போலீசிடம் சிக்கியது எப்படி?

கணவரின் தவறான உறவு குறித்து மனைவி குடியா தேவிக்கு தெரிய வந்தது:மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல்காரராக சந்தீப் பணிபுரிந்து வருகிறார். மேலும், இவர் சத்தீஸ்கரை சேர்ந்த பூஜா என்ற பெண்ணுடன் திருமணத்தைத் தாண்டிய உறவுமுறையில் இருந்து வந்துள்ளார். இந்த விஷயம் குடியா தேவிக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தெரியவந்துள்ளது. இது குறித்து சந்தீப்பிடம் கேட்டபோது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும், மூன்று நாட்களுக்கு முன்பு மும்பையிலிருந்து திரும்பினார், சந்தீப். அப்போது அவருடன் பூஜாவையும் கூட்டி வந்துள்ளார். இதனுடன், குடியாவுடன் எந்த வகையான உறவையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார். பின்பு குடியா காவல் நிலையத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். இதைத் தடுக்க முயன்ற போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜந்தா சௌக் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சி:சந்தீப் தன்னுடன் இருவரையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் மேலும் தற்போது திலையாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரச்சனையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பீகார் மாநிலம் கந்தக் ஆற்றில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்ட குட்டி முதலைகள்!

ABOUT THE AUTHOR

...view details