தமிழ்நாடு

tamil nadu

"கே.சி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஐ.டி. ரெய்டு இருக்காது" - தெலங்கானா அமைச்சர் பேச்சு..

By

Published : Nov 28, 2022, 10:40 AM IST

மத்தியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் ஆட்சி அமைந்ததும் நாட்டில் வருமான வரித்துறை சோதனை என்ற பேச்சே இருக்காது என தெலங்கானா அமைச்சர் பேசியது வைரலாகி வருகிறது.

கே.சந்திரசேகர ராவ - மல்லா ரெட்டி
கே.சந்திரசேகர ராவ - மல்லா ரெட்டி

ஐதராபாத் (தெலங்கானா): தெலங்கானா மாநிலம் சித்திபேட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய தெலங்கானா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி, 2024ஆம் ஆண்டு மத்தியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு வருவார் என்றும், அவரது ஆட்சி அமைந்ததும் நாட்டில் வருமான வரி சோதனை என்ற பேச்சே இருக்காது என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் வருமான வரி தளர்த்தப்படும் என்று தெரிவித்த அவர், இனி வருமான வரி ரெய்டுகளும் இருக்காது என்றார். மக்கள் ஒருவரும் தங்கள் இயன்றதை சம்பாதிக்கலாம் என்றும் தானாகவே முன்வந்து மக்கள் வரி செலுத்தும் வகையில் சந்திரசேகர ராவ் ஆட்சி நடத்துவார் என மல்லா ரெட்டி தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் முறைகேடு புகாரில் சிக்கிய மல்லா ரெட்டியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள், உறவினர்களின் வீடு, மற்றும் அவர் சார்ந்த கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது அதிகாரிகளுடன் வந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் தன் மகனை தாக்கியதாக கூறி மல்லா ரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சோதனையின் போது இடையூறு விளைவித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் மல்லா ரெட்டி மீது அளித்த புகாரையும், சோதனை செய்ய வந்த வீரர்கள் தாக்கியதாக அமைச்சரின் மகன் அளித்த புகாரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்திபேட்டில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மல்லா ரெட்டி, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இருக்கும் வரை எந்த மிரட்டலுக்கும் அஞ்சப்போவதில்லை என்றார்.

இதையும் படிங்க:வெடிகுண்டு மிரட்டல் - பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு...!

ABOUT THE AUTHOR

...view details