தமிழ்நாடு

tamil nadu

ஹைதராபாத்தில் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட மாணவர்கள்?

By

Published : Jan 24, 2023, 3:28 PM IST

Updated : Jan 24, 2023, 6:07 PM IST

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை, அனுமதியின்றி மாணவர்கள் திரையிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஹைதராபாத்தில் மோடி குறித்த பிபிசி ஆவண படத்தை கல்லூரியில் திரையிட்ட மாணவர்கள்
ஹைதராபாத்தில் மோடி குறித்த பிபிசி ஆவண படத்தை கல்லூரியில் திரையிட்ட மாணவர்கள்

ஹைதராபாத்: குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெடித்த கலவரம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிபிசி நிறுவனம் தங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட ஆவணப்படமான ’இந்தியா; மோடி கேள்வி’ (India; the Modi question), பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத்தெரிவித்த நிலையில் அந்த ஆவணப்படம் பிபிசி யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மத்தியப்பல்கலைக்கழகத்தைச் (HCU) சேர்ந்த மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) & சகோதரத்துவ குழு எனப்படும் முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பினர், மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாகவே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மாணவர் அமைப்பினர், எந்த ஒரு அனுமதியும் பெறாமல் கல்லூரி வளாகத்தில் ஆவணப்படம் திரையிடப்பட உள்ளதாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சம்பவம் குறித்து இதுவரை எந்தப் புகாரும் பெறப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு வெடித்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் மோடி கலவரத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், பிரதமர் மோடி குற்றமற்றவர் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"India: The Modi Question" - பிபிசி தொடருக்கு பிரிட்டன் மேலவை உறுப்பினர் கண்டனம்

Last Updated :Jan 24, 2023, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details