தமிழ்நாடு

tamil nadu

'உன்னாவ் அம்மா'வுக்கு முழு ஆதரவு- அகிலேஷ் யாதவ்!

By

Published : Jan 15, 2022, 5:20 PM IST

உன்னாவ் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து சமாஜ்வாதி எந்த ஒரு வேட்பாளரை நிறுத்தாது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் உறுதியளித்தார்.

Akhilesh Yadav
Akhilesh Yadav

லக்னோ : உன்னாவ் சட்டப்பேரவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை நிறுத்தாது என அகிலேஷ் யாதவ் கூறினார். இந்தத் தொகுதியில், 2017 உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆஷா சிங் போட்டியிடுகிறார்.

இது குறித்து அகிலேஷ் யாதவ் பேசுகையில், “உன்னாவ் அம்மாவுக்கு சமாஜ்வாதி முழு ஆதரவை அளிக்கும். அவரை எதிர்த்து சமாஜ்வாதி தரப்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம்” என்றார்.

காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக 125 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தது. இதில், உன்னாவ் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயான ஆஷா சிங்குக்கு போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியது.

அவருக்கு அங்கு ஆதரவு பெருகிவருகிறது. தற்போதும் சமாஜ்வாதி கட்சியும் தங்களது ஆதரவை வழங்கியுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “மாநிலத்தில் 40 விழுக்காடு பெண்கள், 40 விழுக்காடு இளைஞர்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது. சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கிறது” என்றார்.

இதையும் படிங்க : உன்னாவ் வன்புணர்வு; பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு காங்கிரஸ் வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details