தமிழ்நாடு

tamil nadu

மேற்கு வங்கம் பிராண்ட் அம்பாசிடராக சவுரவ் கங்குலி நியமனம் - முதலமைச்சர் மம்தா அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 8:01 PM IST

மேற்கு வங்கத்தின் பிராண்ட் அம்பாசிடராக சவுரவ் கங்குலியை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமித்து உள்ளார்.

West Bengal
West Bengal

கொல்கத்தா : மேற்கு வங்கம் மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலியை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமித்து உள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடராக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை நியமிப்பதாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆணையை மேடையில் வைத்து சவுரவ் கங்குலியிடம், மம்தா பானர்ஜி வழங்கினார்.

கடந்த 2011ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது போது முதல் முறையாக மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகர் ஷாருக்கானை, முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமித்தார். 2011ஆம் ஆண்டு முன்னர் மேற்கு வங்கத்தில் பிராண்ட் அம்பாசிடர் பதவி கிடையாது எனக் கூறப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இணை உரிமையாளரக ஷாருக்கான் தொடர்ந்து நிலையில், மேற்கு வங்கத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டார். தற்போது சவுரவ் கங்குலியை பிராண்ட் அம்பாசிடராக நியமித்து மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதேநேரம் பிராண்ட் அம்பாசிடர் பொறுப்பில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விடுவிக்கப்பட்டாரா என்பது குறித்து மம்தா பானர்ஜி எதுவும் கூறவில்லை. அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியும் நடிகருமான தேவ் என்பவரை மாநிலத்தின் சுற்றுலாத் துறை பிராண்ட் அம்பாசிடராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக சுமூக உறவு நீடித்து வருகிறது. அண்மையில், கடந்த செப்டம்பர் மாதம் மம்தா பானர்ஜி ஸ்பெயின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், அவருடன் சவுரவ் கங்குலியும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், மிட்னாபூரில் எஃகு தொழிற்சாலையில் முதலீடு செய்யப் போவதாக வெளிநாட்டில் சவுரவ் கங்குலியும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, எப்போது தன்னை டிவியில் பார்த்தாலும் உடனடியாக மம்தா பானர்ஜி தனக்கு குறுந்தகவல் அனுப்பிவிடுவார் என்றும், அதேபோல் தான் ஏதாவது குறுஞ்செய்தி அனுப்பினால் நிமிடத்தில் அதற்கு பதிலளித்து விடுவார் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், மம்தா பானர்ஜி அனைவரின் நலனிலும் அதிகம் அக்கறை கொண்டவர் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

இதையும் படிங்க :2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் - ஐசிசி அதிரடி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details