தமிழ்நாடு

tamil nadu

சீரம் நிறுவனம் மோசடி வழக்கு: பல்வேறு மாநில வங்கிகளில் பணப்பரிவர்த்தனை

By

Published : Sep 12, 2022, 8:54 PM IST

மருந்து நிறுவனமான சீரம் நிறுவனம் ஆன்லைன் மூலம் பண மோசடி செய்து அந்தப் பணத்தை பல்வேறு மாநிலங்களிலுள்ள வங்கிகளில் பரிவர்த்தனை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீரம் நிறுவனம் மோசடி வழக்கு: பல்வேறு மாநில வங்கிகளில் பணபரிவர்த்தனை
சீரம் நிறுவனம் மோசடி வழக்கு: பல்வேறு மாநில வங்கிகளில் பணபரிவர்த்தனை

பூனா:இந்தியாவின் புகழ்பெற்ற மாபெரும் மருந்து நிறுவனமான ’சீரம் நிறுவனம்’ ஆன்லைன் மூலம் 1 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 மாநிலங்களில் உள்ள பல வங்கிகளுக்கு இந்த மோசடியில் சம்பாதித்த பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சீரம் நிறுவனத்தின் தலைவரான அதார் பூனாவாலாவின் பெயரில் போலியான வாட்ஸ்அப் முகப்புப்பெயரை வைத்து போலியான மெசேஜ்களை அனுப்பி இந்த மோசடி நடந்தேறியுள்ளது. இது குறித்து புந்தகார்டென் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த மோசடியானது, கடந்த செப்.7 முதல் செப்.8 வரை ஆன்லைனிலேயே நடந்தேறியுள்ளது. மேலும், இந்த மோசடிப் பணம் மேற்கு வங்காளம், பிகார், ஒடிசா, கேரளா, மத்தியப் பிரதேசம் என ஐந்து மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பரிவர்த்தனையாகியுள்ளது எனக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பண மோசடி வழக்கு - ஜபல்பூர் மறைமாவட்ட ஆயர் பிசி சிங் கைது!

ABOUT THE AUTHOR

...view details