தமிழ்நாடு

tamil nadu

OTP இல்லாமல் மிஸ்டு கால் மூலம் ரூ.50 லட்சம் திருட்டு.. பொதுமக்கள் உஷார்!

By

Published : Dec 13, 2022, 8:43 AM IST

டெல்லியில் ஓடிபி(OTP) இல்லாமல் தெரியாத எண்ணில் இருந்து மிஸ்டு கால் வந்த சில நிமிடங்களில் ரூ.50 லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rs 50 lakh theft by missed call without OTP from businessman in Delhi police investigation
rs 50 lakh theft by missed call without OTP from businessman in Delhi police investigation

டெல்லி:தெற்கு டெல்லி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து 50 லட்சம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிவிட்டதாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " புகார் அளித்த நபர் வழங்கிய தகவலின் படி வங்கி ஓடிபி(OTP) உள்ளிட்ட எந்த விபரமும் பகிரப்படாமல் இந்த கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது. இருமுறை மிஸ்டு கால் வந்ததாகவும் அதனை ஏற்று பேசிய போது இந்த திருட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதால் இது செல்போனை ஹேக் செய்து நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்" இவ்வாறு கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் RTGS பரிவர்த்தனைகள் மூலம், பாஸ்கர் மண்டல் என்ற நபருக்கு ரூ.12 லட்சமும், அவிஜித் கிரி என்ற நபருக்கு ரூ.4.6 லட்சம் மீண்டும் மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎன்எஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வைத்தியம் பார்க்க வந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவர் கைது

ABOUT THE AUTHOR

...view details