தமிழ்நாடு

tamil nadu

நாட்டின் (G)as, (D)iesel, (P)etrol உயர்கிறது- ராகுல் காந்தி!

By

Published : Sep 1, 2021, 5:49 PM IST

நாட்டின் ஜிடிபி (GDP) உயர்ந்து கொண்டேவருகிறது. அந்த ஜிடிபி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருவாய் அல்ல. மாறாக கியாஸ், டீசல், பெட்ரோல் விலை என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாம் கடந்த 7 ஆண்டுகளாக புதிய பொருளாதாரம் ஒன்றை பார்த்துவருகிறோம்.

ஒருபுறம், ரூ.500, ரூ.1,000 உயர் ரக நோட்டுகளை செல்லாதவை என அறிவித்துவிட்டு, மறுபுறம் நாட்டின் சொத்துகளை விற்று பணமாக்குகின்றனர்.

முன்னர் மோடிஜி பணமிழப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்றார். தற்போது நிர்மலா சீதாராமன் பணமாக்கல் நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்கிறார்.

இதில் பணமிழப்பு, பணமாக்கல் என்றால் என்ன என்று நாட்டு மக்கள் கேட்கிறார்கள்” என்றார். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் குறித்து கூறுகையில், “மத்திய அரசின் செயல்களால் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு தொழிலாளர்கள், அரசு பணியாளர்கள், நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆனால் தனது 4-5 நண்பர்களுக்காக நரேந்திர மோடி இதனை செய்கிறார்” என்றார்.

உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், ஒன்றிய அரசு விற்பனையில் பிஸி- ராகுல் காந்தி!

மேலும், “2014ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல், கியாஸ் அரசாங்கம் சம்பாதித்த ரூ.23 லட்சம் கோடி என்னாது” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி ட்விட்டரில், “நாட்டின் ஜிடிபி வளர்ச்சியடைந்துவருகிறது. அந்த ஜிடிபி நாட்டின் மொத்த உள்நாட்டு வருமானம் அல்ல. மாறாக கியாஸ், டீசல், பெட்ரோல்” எனத் தெரிவித்துள்ளார்.

அதாவது ஜிடிபி என்ற வார்த்தைக்கு (G)as, (D)iesel, (P)etrol என்று பொருள் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பாஜக வருமானம் 50% அதிகரிப்பு, உங்கள் வருவாய்? ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details