தமிழ்நாடு

tamil nadu

RBI Governor : பணவீக்கத்தின் மீது போர்... வட்டி விகிதங்கள் குறித்து உண்மை உடைத்த ஆர்.பி.ஐ கவர்னர்!

By

Published : May 24, 2023, 6:59 PM IST

RBI

பொருளாதார தரை நிலவரத்தை கருத்தில் கொண்டே வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுவதாகவும், பணவீக்கத்தின் மீதான போர் இன்னும் முடிவுக்கு வராததால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

டெல்லி :சில்லரை பணவீக்கம் நடுநிலையில் விகித்தாலும், பணவீக்கத்துக்கு எதிரான போரில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் நடந்த தொழில் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது, "பணவீக்கத்திற்கு எதிரான போர் இன்னும் நிறைவு பெறவில்லை என்றும் அதுவரை நாம் மனநிறைவு கொள்ள முடியாது என்றார். நிதிக் கொள்கைகள் குறித்த முடிவுகளை சூழ்நிலையின் தரத்தை பொறுத்தே மாற்ற முடியும் என்றும் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மாற்ற முடியாது என்றார்.

வரும் நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்து கருத்துக்கு பதிலளித்த சக்திகாந்த தாஸ், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஆர்.பி.ஐயின் நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதங்களில் ஏற்பட்ட திருத்தங்கள் குறித்து தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 6 புள்ளி 5 சதவீதமாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த நிதிக் கொள்கைக் குழு வட்டி விகிதங்களில் 250 புள்ளிகள் உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ ரேட் உயர்வுக்கான காரணம் குறித்து பேசிய சக்திகாந்த தாஸ், வட்டி விகிதங்களில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் தனிப்பட்ட நபரின் விருப்பத்தில் எடுக்கப்படும் முடிவு இல்லை என்றும் அப்போதைய சந்தை நிலவரம் மற்றும் பணவீக்கத்தின் தரத்தை பொறுத்தே முடிவு எடுக்கப்படுவதாக கூறினார்.

சில்லரை பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், பணவீக்கத்திற்கு எதிரான போர் இன்னும் முடிவு பெறவில்லை என்றும் அதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பணவீக்க விவகாரத்தில் El Nino காரணிகளின் முடிவுகளை பொறுத்தே பொருளாதார சுனக்கத்தில் மனநிறைவு கொள்வதற்கான சூழல் உருவாகுமே என தெரிய வரும் என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.

நாட்டின் ஆண்டு சில்லரை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 4 புள்ளி 7 சதவீதம் என்ற அளவில் குறைந்து உள்ளதாகவும் அதற்கு முந்தைய மாதத்தில் 5 புள்ளி 66 சதவீதம் என்று இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். நடப்பு மாதத்திற்கான சில்லரை பணவீக்கம் குறித்த தரவுகள் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

அதேநேரம் மே மாதத்திலும் சில்லரை பணவீக்கம் முந்தைய மாதங்களில் ஏற்பட்ட விகிதாச்சாரங்களை காட்டிலும் குறைவாக இருக்கும் என நம்புவதாகவும், ரிசர்வ் வங்கி நிதியியல் குழு பணவீக்கத்தை 4 சதவீதம் என்ற அளவில் கணித்து வைத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய வங்கி அமைப்பு வலுவான மூலதனம், பணப் புழக்கம் ஸ்திரத்தன்மையுடன் கூடிய நிலை மற்றும் சொத்து தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் நிலையிலும், மீள்தன்மையுடனும் இருப்பதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மையை பராமரிக்கவும், பொருளாதாரத்தை ஆதரிக்கவும் தன்னால் முடிந்த அனைத்தை நடவடிக்கைகளையும் ஆர்பிஐ முனைப்புடனும், விவேகத்துடனும் மேற்கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க :கர்நாடக சபாநாயகராக யு.டி. காதர் தேர்வு... இவர் தான் முதல் சபாநாயகர்!

ABOUT THE AUTHOR

...view details