தமிழ்நாடு

tamil nadu

ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் - காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியுடன் ஆலோசனை

By

Published : Sep 26, 2022, 6:48 PM IST

Rajasthan

ராஜஸ்தான் அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் இருவரும் சோனியா காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் எம்.பி சசி தரூர் இடையே போட்டி நிலவுகிறது. இதில் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் தலைவரானாலும் முதலமைச்சராக நீடிக்க கெலாட் விரும்பிய நிலையில், இதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்வானால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிடும். அதனால், சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்க காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று(செப்.25) செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், 40 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சாசன பதவிகளை தான் வகித்து விட்டதாகவும், இப்போது அடுத்த தலைமுறையினர் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.

ஆனால், அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் பைலட் முதலமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக தெரிகிறது. சச்சின் பைலட் முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியதாக தெரிகிறது. இதனால், ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அசோக் கெலாட் மற்றும் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு, சோனியா காந்தி அழைப்பு விடுத்தார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினரும் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் இருவரும் டெல்லியில் சோனியா காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ராஜஸ்தானின் அரசியல் நிலைமை குறித்து இருவரும் அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்..? தொடங்கிய வேட்புமனு தாக்கல்..!


ABOUT THE AUTHOR

...view details